கஞ்சா போதையில் வீட்டைக் கொளுத்திய நபர்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (21:04 IST)
வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கஞ்சா போதையில் வீட்டைக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டுப் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எப்போதும் கஞ்சா போதையில் வீட்டில் தகராறு செய்து வரும் அந்த நபர், இன்று அதிக போதையில் இருந்த போது, தன் வீட்டை தீயில் கொளுத்திவிட்டு, தன் அலைபேசி அம்மாவுக்கு வீட்டை கொளுத்திவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தி, வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் எரிந்து போயின.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்