எந்நேரமும் போன் பேசிக்கொண்டிருந்த மனைவி - காதை அறுத்த கணவன்

சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:40 IST)
சேலத்தில் பெண்மணி ஒருவர் எந்நேரமும் போன் பேசிக்கொண்டே இருந்ததால், அவரது கணவர் அந்த பெண்மணியின் காதை அறுத்துள்ளார்.
சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா(40). இவரது மனைவி சந்தியா (40) இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
சந்தியா எந்நேரமும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை முத்துராஜா கண்டித்த போதிலும், சந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் சம்பவத்தன்றும் சந்தியா நீண்ட நேரமாக போன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் முத்துராஜா, அரிவாளை எடுத்து சந்தியாவின் காதை அறுத்துள்ளார். 
 
சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சந்தியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதனையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் முத்துராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்