இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு, குமாரமங்கலம் சென்றார். அப்போது அங்கு தேடிவந்த ராமுவிடம், எனது மகள்கள் பெரியவர்களாகி விட்டனர். எனவே இனிமேல் என்னை தேடி வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியுள்ளாராம்.
இந்த நிலையில் கொடிபவுனுவை பார்க்க நேற்று காலை ராமு சிறுவத்தூர் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு, கொடிபவுனை அரிவாளால் வெட்டினார். . இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அறிந்த போலீசார் கொடிபவுனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப் பவைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமுவை உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.