கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 28 மாவட்டங்களில் மழை பெய்யும்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:49 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மட்டக்களப்பு மற்றும் திரிகோணமலை பகுதிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்