கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் போலீஸார் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறி வந்தனர்.
இதற்கிடையே மனைவி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக சந்தேகித்த பாலகிருஷ்ணன், சந்தியாவை கொடூரமாக கொலை செய்து அவரின் உடல் பாகங்களை ஆங்காங்கே வீசியுள்ளார். போலீஸார் ராமகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.