கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

திங்கள், 24 ஜூலை 2023 (14:48 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சற்றுமுன் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
பேருந்து நிலையத்தின் 1வது பிளாட்பார்மில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர்  தொலைபேசி மூலம் மிரட்டல் வைத்துள்ளார். இதனை அடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர் 
 
இதுவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எந்த விதமான வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை என்பதை அடுத்து இது  வழக்கம் போல் பொய்யான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் தீவிர பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்