பாலமேடு ஜல்லிக்கட்டு: காளையை அடக்க 9 காளையர்களுக்கு அனுமதி மறுப்பு

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (08:07 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்த நிலையில் இன்று மதுரை பாலமேடு பகுதியில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த நிலையில் 9 வீரர்கள் மருத்துவ சோதனையில் தேர்வு செய்யப்படாததால் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. காளையை அடக்கும் காளையர்கள் 170 செமீ உயரம், 55 முதல் 60 கிலோ வரை எடை, 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என்பதும், ரத்த அழுத்தம், இதய துடிப்பு, கண் பரிசோதனை ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

முன்னதாக மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மருத்துவக்குழு பணி உள்ளிட்டவை குறித்து மத்திய கண்காணிப்புக்குழு உறுப்பினர் எஸ்.கே.மிட்டல், ஆட்சியர் நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருப்பதை அறிந்து அதன்பின் ஜல்லிக்கட்டு நடத்த அவர்கள் அனுமதியளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்