தமிழகத்தில் 8,499 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் காமராஜ் தகவல்

வியாழன், 21 ஜனவரி 2016 (23:04 IST)
தமிழகத்தில், 8,499 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 

 
தமிழக சட்ட மன்றத்தில், உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் காமராஜ் பதில் அளித்தார்.
 
அப்போது, அவர் கூறுகையில், தமிழகத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 8,499 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்