7 பேர் விடுதலை வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது - உச்சநீதிமன்றம்!

வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (10:51 IST)
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுவதாக நிர்ணயித்து அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றியுள்ளது.
சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த அரசியல் சாசன அமர்வு 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
 
5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரிக்கும். இதுபோன்ற ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக சந்திப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.
 
வழக்கில் 7 விதமான விஷயங்களை விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்