6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி கல்வி: தமிழக அரசு

ஞாயிறு, 21 ஜூன் 2009 (12:25 IST)
இந்தக் கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 4,200 நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் இந்த கணினி (கம்ப்யூட்டர்) கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பில், முதற்கட்டமாக 6ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரமும் 2 வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன பொறியாளர்கள் மூலம் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணித ஆய்வகங்கள், ஆங்கில மொழித்திறன், கம்ப்யூட்டர் கல்வி என 3 முக்கிய அம்சங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்