பொறியியல் படிப்புக்கு டிமாண்ட் இல்லை – 52 சதவீத இடங்கள் காலி !

புதன், 31 ஜூலை 2019 (15:00 IST)
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 52 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு கலந்தாய்வுக்கான இடங்களாக 1,72, 940 சீட்களாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்புக்கான மதிப்பு குறைந்துகொண்டே வந்துகொண்டு இருக்கிறது.  அதேபோல இந்த ஆண்டும்  1,33 ,116  மாணவர்களே  விண்ணப்பித்தனர். இதையடுத்து பொறியியல் கலந்தாய்வுகள் கடந்த ஒரு மாதமாக நடந்து முடிந்துள்ளன. கலந்தாய்வின் இறுதியில் ஒட்டுமொத்தமாக 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பின. கிட்டத்தட்ட 52 சதவீத இடங்கள் காலியாக நிரப்பப்படாமலேயே உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்