பாமக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்

Ilavarasan

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:44 IST)
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் பாமக பிரமுகர் ஒருவர் வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
வேலூர் அருகே அணைக்கட்டு ஒன்றியம் ஊனைபள்ளத்தூர் கிராமத்தில் பாமக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கியிருப்பதாக பறக்கும் படை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அணைக்கட்டு பகுதி பறக்கும்படை அதிகாரி ரெஜினா, தாசில்தார் மோகன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஊனைபள்ளத்தூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு பாமக ஒன்றிய தலைவர் குப்புசாமி என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
 
சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்தனர். அதனை மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 
இதுகுறித்து குப்புசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வேலூர் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்