பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன், பிரேமா தம்பதியனருக்கு கல்பனா, தருண்மாடசாமி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இசக்கியப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் பிரேமா தான் இதற்கு காரணம் என நினைத்த ஆறுமுகம் அவரை பழிவாங்கி எண்ணி, நேற்று மாலை பிரேமா அவரது 5 வயது மகன் தருண் உடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழி மறித்து அந்த சிறுவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இதனை தடுக்க முயன்ற தாய் பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிய ஆறுமுகத்தை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன் தருணையும், தாய் பிரேமாவையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.