கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடல் உள்ளுறுப்புகளை ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்த போது, அவரது உடலில் ‘குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த அறிக்கை வெலியிடப்பட்டுள்ளது. அதில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவே அவரது உயிரிழப்புக்க்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மதுவினால் இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை, எனவே கலாபவன் மணிக்கு யாரோ பீரில் மெத்தனாலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளது.