ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை அபேஸ்

செவ்வாய், 7 ஜூன் 2016 (12:29 IST)
மார்த்தாண்டம் அருகே ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகையை  கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மார்த்தாண்டம், சேனல்கரை ரோட்டைச் சேர்ந்த போஸ்கோ (52) என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகாய ராணி. இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில், அவர், உடை மாற்ற மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு, பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த பொருட்கள்  மற்றும் 70 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.2 லட்சம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.
 
இதனையடுத்து, ஆசிரியை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்