பெரம்பூரில் தனியார் ஹோட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அதில் விஷவாயு வெளியானதால் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன், வினய், சதீஷ் ஆகிய 3 தொழிலாளர்கள் இறந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களை கொண்டு பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி, செம்பியம், எஸ்பிளனேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.