நாகர்கோவிலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்துகள் சப்ளை

வியாழன், 8 அக்டோபர் 2015 (17:27 IST)
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், பள்ளிவிளை ரெயில் நிலையம் மற்றும் கிருஷ்ணன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பணை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்து இவரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



நாகர்கோவில் ரயில் நிலையம் மற்றும் பள்ளி கல்லூரிகளில் ஒரு கும்பல் போதை மருந்துகளை சப்ளை செய்வதாகவும் சில மாணவர்கள் விற்க்கப்படும் காஞ்சா மருந்துகளை வாங்கி ஊசியில் பொதை ஏற்றி கல்லூரிக்கு வெளியில் மயங்கி கீழே விழுந்துள்ளதாகவும் போலீஸாருக்கு அப்பகுதியில் சிலர் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வடசேரி இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து தலைமையில் போலீசார் கஞ்சா விற்க்கப்படும் சில பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று கஞ்சா விற்க்கப்படும் பள்ளி, கல்லூரிகளில் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அப்பொழுது, பள்ளிவிளை ரயில்நிலைய சாலையில் ஒரு ஆட்டோ நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை போலீஸார் கண்காணித்தனர். பின்னர், ஆட்டோ அருகே சென்று பார்த்தபோது ஆட்டோவில் 3 வாலிபர்கள் கல்லூரி மாணவர்களிடம் போதை மருத்து, கஞ்சா பொட்டலங்களை விற்று வந்தனர்.

மேலும், 3 வாலிபர்களிடமிருந்து, 6 பாட்டில்களில் போதை மருந்தும், ஒரு கிலோ கஞ்சா பொட்டலமும், போதை மருந்தை செலுத்துவதற்கான ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
3 வாலிபர்களில் கைதான சேகர் என்பவர் போதை மருந்து விற்பனை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மீது நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த கும்பலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் கருதுவதால் அவர்களை ரகசிய இடங்களில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருகளுடன் தொடர்பில் இருப்பதாக கருதப்படும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்