தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்: 3,793 வழக்குகள் பதிவு

செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:28 IST)
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 3,793 வழக்குகள் தமிழகத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆனையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோண்டு வந்தது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள், தமிழகத்தில் மார்ச் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
 
அன்று முதல் பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்ததாக பிரவீண்குமார் தெரிவித்தார். அந்த புகார்களின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாவும், மேலும் தமிழகமெங்கும் ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், சட்டவிரோதமாக பேசியதாகவும், கூட்டம் நடத்தியதாகவும் 81 வழக்குகள், பதிவு செய்யப்ட்டுள்ளதாக பிரவீண்குமார் குறிப்பிட்டுள்ளார்.
 
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்