3வது நாளாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

புதன், 28 ஏப்ரல் 2010 (15:34 IST)
webdunia photo
WD
ஈரோட்டில் மூன்றாவது நாளாக இ‌ன்று‌ம் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ூல் விலை அதிகரிப்பு, மின்சார வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை முன் வைத்து ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக இ‌ன்று‌ம் இவர்களது போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தினால் இப்பகுதியில் 30 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உற்பத்தியாகும் பெட்சீட், ஜம்மக்காளம், லுங்கி உள்ளிட்ட ஜவுளி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்