கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்- உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி
வெள்ளி, 6 மே 2022 (19:25 IST)
நாகையில் உள்ள இறைச்சிக்கடையில் இன்று கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகையில் உள்ள பிரபல இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் இயடுபட்டனர். அதில், கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெட்டுபோன இறைச்சிகள் இறைச்சிக்கடைகளிலும், ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.