சமீபத்தில் ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்து மூன்று உயிர்கள் பலியான விவகாரம் குறித்து தன்னை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்தி வருகின்றனர் என்று நடிகர் கமல்ஹாசன் திடுக்கிடும் புகார் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 பட விபத்து சம்பந்தமாக கமல்ஹாசன் ஆஜராக வேண்டியதில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்து நிகழ்ந்த இடமான நசரத்பேட்டை பிலிம் சிட்டியில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கமல் ஆஜராக தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது கமல் தவிர்த்து இயக்குநர் ஷங்கர் உட்பட மற்ற 23 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.