கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 220 மி.மீட்டர் மழை பெய்துள்ளது

ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (14:39 IST)
கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 220 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


 


கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை படகு மூலமாக தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல்படையினர், போலீசார், மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.மேலும், முன் எச்சரிக்கையாக தாழ்வான பகுதி மக்களும் வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்
 
நேற்று இரவு விடிய, விடிய கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. என்.எல்.சி.யில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ள நீர் கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 220 மி.மீட்டர் மழை பெய்து உள்ளதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்