ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 22 அதிகாரிகள் மாற்றம்

புதன், 5 ஏப்ரல் 2017 (23:07 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக அளவிலான தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்த போதிலும் அரசு உயரதிகாரிகல் ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது



 


ஏற்கனவே சென்னை மாநகராட்சி காவல்துறை கமிஷனர் ஜார்ஜ் உள்பட ஒருசில அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ள நிலையில் இன்று அதிரடியாக மேலும் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 22 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, வடசென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.சி.சாரங்கன் ஐ.பி.எஸ்-க்கு பதிலாக ஜெயராம் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன் ஐ.பி.எஸ்சும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷாசாங்சாயும் நியமிக்கப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் மற்றும் எம்.கே.பி.நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்