கஸ்டம்ஸில் இருந்து பேசுவதாக மிரட்டி சென்னையில் 2.8 கோடி அபேஸ்! நைஜீரிய கும்பலை தட்டித்தூக்கிய தனிப்படை!

Prasanth Karthick

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (09:42 IST)
வெளிநாட்டிலிருந்து பரிசு அனுப்பவதாக சொல்லி பணம் பறித்து ஏமாற்றும் நைஜீரிய கும்பல் சென்னையை சேர்ந்த பெண்ணிடம் இருந்து ரூ.2.8 கோடியை ஏமாற்றியுள்ளது.



சென்னை கே.கே.நகரை சேர்ந்த பெண் ஒருவருடன் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலமாக பேசிப் பழகி நட்பாகியுள்ளார். பின்னர் அந்த பெண்மணிக்கு தனது நாட்டிலிருந்து பரிசு ஒன்றை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு பிறகு சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக சிலர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

பெண்ணின் முகவரிக்கு இரண்டு பார்சல்கள் வந்துள்ளதாகவும், அதில் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை இருப்பதால் அபராத தொகை செலுத்தினால்தான் பார்சலை விடுவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் அந்த பெண் அவர்கள் சொன்ன அபராத தொகையை கட்டியுள்ளார். ஆனாலும் அடுத்து மும்பை போலீஸ் என அடுத்து சிலர் அந்த பெண்ணை அழைத்து பணம் கேட்டி மிரட்டியுள்ளனர்.

ALSO READ: கால்பந்து வீரரை தாக்கி மின்னல்.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்! – இந்தோனேஷியாவில் சோகம்!

இப்படியாக மிரட்டலுக்கு பயந்து ரூ.2.8 கோடியை அந்த பெண் இழந்த பிறகுதான் இது மோசடி என கண்டுகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீஸார் வங்கி பரிவர்த்தனை தகவல்களை கொண்டு டெல்லியில் தங்கியிருந்த இரண்டு நைஜீரிய நாட்டினரை கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னாலும் இதுபோன்று கஸ்டம்ஸ், போலீஸ் பெயர் சொல்லி நைஜீரிய கும்பல் பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் இதுபோன்ற சம்பவங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்