2வது நாளில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்

ஞாயிறு, 22 ஏப்ரல் 2012 (15:45 IST)
இன்று இரண்டாவது நாளாக என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது

என்எல்சியில் பணி புரிந்து வரும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஏஐடியுசி சார்பிலான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை நேற்று தொடங்கியது.

இதற்கு தொமுச, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்