2ஜியில் ராசா எந்த ஊழலும் செய்யவில்லை - க.அன்பழகன்

Erode velusamy

திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:07 IST)
2ஜி ஒதுக்கீட்டில் அரசாங்கத்திற்கு இழப்பு என்பது உண்மைதான் ஆனால் இதில் ராசா எவ்விதத்திலும் ஊழல் செய்யவில்லை என திமுக பொருளாளர் அன்பழகன் பேசினார்.
நீலகிரி லோக்சபாவிற்கு உட்பட்டது பவானிசாகர் சட்டமன்ற தொகுதி. இதற்குட்பட்ட புன்செய்புளியம்பட்டியில் திமுக வேட்பாளர் ராசாவை ஆதரித்து திமுக பொருளாளர் அன்பழகன் பேசினார்.
 
அப்போது அவர் கூறியது: கடந்த திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. டான்சி வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதாவிற்கு கொடநாடு, சிறுதாவூர் என பல இடங்களில் பங்களாக்கல் சொத்துகள் உள்ளது.
 
திமுக ஆட்சியை விட தற்போது விலைவாசி மிகவும் அதிகரித்து ஏழை மக்களை வாட்டுகிறது. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டும் ராசா குற்றமற்றவர். 2ஜி ஒதுக்கீட்டில் ஏலம் முறையில் ஒதுக்காமல் முதலில் வந்தவர்களுக்கு முன் உரிமை என்ற விதத்தில் ஒதுக்கியதால் அரசுக்கு இழப்பு என்பது உண்மைதான். ஆனால் இதில் ராசா எவ்வித ஊழலும் செய்யவில்லை என்றார்.
 
கூட்டத்தில் நீலகிரி லோக்சபா திமுக வேட்பாளர் ராசா, ஈரோடு மாவட்ட திமுக செயலளார் ராஜா, புன்செய்புளியம்பட்டி நகராட்சி தலைவர் அன்பு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்