தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (23:09 IST)
தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 13 எஸ்.பிக்கள் கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழக அரசு சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
கோவை நகர தலைமையக துணை கமிஷனர் மகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், 
நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சென்னை தலைமையக துணை கமிஷனராகவும், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும், திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி, மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமையாள், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
 
அதே போல, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி, தமிழ்நாடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராகவும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளர் சக்திவேல், திருச்சி மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருச்சி மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனர் சசிமோகன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் பொறுப்பு ஏற்பார்கள்.
 
கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 வது பட்டாலியன் கமாண்டண்ட் மூர்த்தி, கோவை நகர தலைமையக துணை கமிஷனராகவும், தமிழ்நாடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2 ஆவது பட்டாலியன் துணை கமாண்டண்ட் சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று, கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 ஆவது பட்டாலியன் கமாண்டண்டாக நியமனம் செய்யபட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்