மேலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களுடன், அவர்களது உறவினர்களிடம் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடம் பலருக்கும் தெரிந்துவிட்டதால் வேறு ரகசிய இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, பழையபடி சொகுசு பேருந்தில் அழைத்துச்சென்றாலும் தெரிந்துவிடும் என்பதால், தனித்தனி காரில் எம்.எல்.ஏக்களை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.