செய்முறை தேர்வுக்கு நேரம் குறைப்பு!

சனி, 23 ஏப்ரல் 2022 (12:35 IST)
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தொழிற்கல்வி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றில் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 
 
இதுபோன்று, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவி) செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்