11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம். முழு விவரங்கள்..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (16:53 IST)
நிர்வாக காரணங்கள் மற்றும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்க அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இன்று 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் பின்வருவன:
 
1. ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்
 
2. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்
 
3. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்
 
4. TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம்
 
5. மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம்
 
6. சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
 
7. கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்
 
8. மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்
 
9. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம்
 
10. சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
 
11. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்