ஜுன் 30ஆம் தேதிக்குள் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை

வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஜூன் 30 ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளங்களில் பதிவேற்றம் வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 
 
பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் தேவைப்படுவதால் அந்த மதிப்பெண்களை உடனடியாக இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீட்டிற்கு 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் தேவைப்படுவதால் அதனை சரிபார்த்து ஜுன் 30ஆம் தேதிக்குள் சான்றிதழுடன் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு; தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கை.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்