தமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன், 25 நவம்பர் 2015 (00:12 IST)
தமிழகத்தில் மழைக்கால காய்ச்சலை தடுக்க 1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து, தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை தடுக்க, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழகம் முழுவதும் 1061 இடங்களில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்