அரசை கலைக்க வேண்டும்: ஆன்லைனின் 1.21 லட்சம் இளைஞர்கள்

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (19:01 IST)
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இணையதளத்தில் அரசை கலைக்க வேண்டும் என்று 1.21 லட்சம் இளைஞர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.


 


கடந்த 5ஆம் தேதி மாலை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழகத்தின் அடுத்த முதல்வராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராவதை நாங்கள் விரும்பவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மாற்றம் என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி அதில், ஜனாதிபதி தலையிட்டு தமிழக அரசை கலைக்க வேண்டும். சசிகலா முதல்வராக பதவி ஏற்பதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டனர். அதில் தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வமே தொடர்ந்து முதலமைச்சர் நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்த பதிவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே 1.21 லட்சம் பேரிடம் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. இதில் குறிப்பாக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்