துபாயிலி்ருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. துப்புரவு ஊழியர்கள் அவ்விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டு உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்க கட்டிகள் இருந்த பையை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 4 கிலோ எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.