1 மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு, 18 ஜூலை 2010 (12:11 IST)
ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் தாக்கீது அனுப்புமாறு தமிழ அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சார்பில் மரம் வெட்டப்படும் முறைகேடு குறித்து ஞனேஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது, அரசு வழக்கறிஞர் தரப்பில் பொதுப்பணித் துறை சார்பில் அரசுக்கு எழுதப்பட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “புதிய மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இதுகுறித்து விவசாயத் துறையுடன் கலந்து ஆலோசித்து பொதுத் துறை அரசாணை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை பதிவு செய்த நீதிபதிகள், “வெட்டப்படும் மரத்துக்குப் பதிலாக 10 புதிய மரக்கன்றுகள் நடுவது தொடர்பான சுற்றறிக்கையை 6 வாரங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்”என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்