'டேவிட்' படத்தை விமர்சித்தவரை நிர்வாணப்படுத்திய ரசிகர்கள்!

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (17:44 IST)
FILE
'டேவிட்' படம் நன்றாக இல்லை என விமர்சித்த ஆட்டோ ஓட்டுனரை விக்ரம் ரசிகர்கள் தாக்கி, நிர்வாணப்படுத்தி தெருவில் வீசியுள்ளனர்.

டேவிட் - விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம். பட‌த்தை ‌பிஜா‌ய் ந‌ம்‌பியா‌ர் இய‌க்‌கியு‌ள்ளா‌ர்.

விக்ரம், ஜீவா என இரு முன்னனி கதாநாயகர்கள் முதல் முறையாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ராஜபாளையத்தில் 'டேவிட்' படத்தை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் இளையராஜா, படம் நன்றாகவே இல்லை என விமர்சித்துள்ளார். இதனை‌க் கேட்டு கோபமுற்ற விக்ரம் ரசிகர்கள் இளையராஜாவை ஆவேசமாக தாக்கி, அவரை நிர்வாணப்படுத்தி தெருவில் வீசினர்.

இதுதொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்