'டி.‌ஜி.‌‌பி.யாக ல‌‌த்‌திகா சர‌ணை நிய‌மி‌த்தது செ‌ல்லு‌ம்'

வியாழன், 12 ஜனவரி 2012 (16:23 IST)
''த‌மிழக டி.‌ஜி.‌பி.யாக ல‌த்‌திகா சர‌ண் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டது ச‌ரியே'' எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

ல‌த்‌திகா‌வி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌விசா‌ரி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

கட‌ந்த ‌தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌ல் ல‌த்‌திகா சரணை டி‌.ஜி.‌பி.யாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌த்து டி.‌ஜி.‌பி. நடரா‌ஜ் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில‌் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை ‌‌விசா‌ரி‌த்த உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம், ம‌த்‌திய ‌தீ‌ர்‌ப்பாய‌‌த்தை அணுகுமாறு நடரா‌ஜி‌க்கு உ‌த்தர‌வி‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து ம‌த்‌திய ‌தீ‌ர்‌ப்பாய‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌‌ர் நடரா‌ஜ்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ம‌த்‌திய ‌தீ‌ர்‌ப்பாய‌ம், ல‌த்‌தியா சரணை டி.‌ஜி.‌பி.யாக ‌நிய‌மி‌த்தது செ‌ல்லாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் டி.‌ஜி.‌பி. ல‌த்‌திகா சர‌ண் மே‌ல்முறை‌யீடு ச‌ெ‌ய்தா‌ர். இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பை தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் த‌ள்‌ளிவ‌‌ை‌த்தது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், த‌மிழக டி.‌ஜி.‌பி.யாக ல‌த்‌திகா சர‌ண் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டது ச‌ரியே'' கூ‌றியு‌ள்ளது.

பத‌‌வி உய‌ர்வு‌க்கு ப‌ணி மூ‌ப்பு அடி‌ப்படை ம‌ட்டுமே காரண‌ம் அ‌ல்ல எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்