`சென்னை வாரம் 2009'-ஆக. 23 வரை கொண்டாட்டம்

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (19:43 IST)
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் `சென்னை தினம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, இந்த ஆண்டில் `சென்னை வாரமாக' உருவெடுத்து, சென்னையின் பாரம்பரியம், முக்கிய இடங்களை அறிந்து கொள்ள வசதியாக ஆக. 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
webdunia photo
WD

கடந்த 1,639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று சென்னை கண்டுபிடிக்கப்பட்ட நாளைக் கொண்டாடும் வகையில், தொடங்கப்பட்ட இந்நாள் தற்போது 15 நாட்கள் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக `சென்னை வாரம் -2009' அமைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இந்த ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியே சென்னை வாரம் தொடங்கப்படுகிறது.

இசை நிகழ்ச்சிகள், சென்னையின் பாரம்பரிய பகுதிகளை நடந்து சென்று அறிதல், பட்டி மன்றம், சென்னை பற்றிய பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள் என பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் இந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என்று அமைப்பாளர்களான எஸ்.முத்தையா, ஸ்ரீதர், வின்சென்ட் டிசோசா, டாக்டர் எஸ். சுரேஷ், சசி நாயர், வி. ஸ்ரீராம் ஆகியோர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்