'மரம் வளர்க்க மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும்'

புதன், 2 டிசம்பர் 2009 (12:46 IST)
''மரம் வளர்க்க மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டவேண்டும்'' என சத்தியமங்கலம் வனசரக ரேஞ்சர் எம்.எஸ்.மணி கே‌ட்டு‌க் கொ‌‌ண்டா‌ர்.

webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேரு‌ந்து ‌நிலைய‌ம் அருகே ஸ்ரீ ராகவேந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உ‌ள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் மரம் நடும் விழா கால்லுரி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு வந்த அனைவரையும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மூர்த்தி வரவேற்றார். முதுநிலை விரிவுரையாளர் ராமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

சத்தியமங்கலம் வனசரக ரேஞ்சர் எம்.எஸ்.மணி விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், 1980ஆம் வருடத்திற்கு முன் நம் நாட்டில் 33 சதவீதம் வனப்பகுதி இருந்தது. இதன்பிறகு படிப்படியாக வனப்பகுதி குறைய தொடங்கியது.

சில தொழிலதிபர்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பட்டா நிலங்களாக மாற்றினர். மேலும் மரங்களை வளர்ப்பதற்கு பதிலாக வெட்ட தொடங்கினர். இதனால் வனப்பகுதியின் அளவு 17 சதவீதமாக குறைந்தது.

இதன் காரணமாக பல மாற்றங்கள் ஏற்பட்டது. புவி வெப்பமடைய தொடங்கியது. மக்கள் தொகை மட்டுமே அதிகரித்தது. அதற்கு இணையாக மரங்கள் வைப்பது அ‌திகரிக்கவில்லை.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வனத்துறை சார்பாக தனியாருக்கு மரம் வளர்க்க ஊக்குவித்து வருகிறோம். தற்போதுகூட தனியார் பட்டா நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா நகலை கொடுத்தால் போதுமானது. கல்வி நிறுவனங்களுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குகிறோம்.

மாணவ, மாணவிகள் மற்றும் நாளை ஆசிரியராகபோகும் ஆசிரிய பயிற்சி நிறுவனங்களில் படித்து வருபவர்கள் மரங்களை வளர்ப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மரங்கள் வளர்க்கவேண்டியது அவசியம் என்றார்.

முடிவில் விரிவுரையாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்