'அதி தீவிர' தானே புயல் எச்சரிக்கை

வியாழன், 29 டிசம்பர் 2011 (15:20 IST)
சென்னையிலிருந்து 250கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள தானே புயல் 'அதி தீவிர' புயல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 135கிமீ வேகம் கொண்ட பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் 9ஆம் எண் ஏற்றப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை இந்தப் புயல் சென்னைக்கும், நாகப்பட்டிணத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது 25 செ.மீ. வரை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு முதல் புயல் காற்று மணிக்கு 55- 65 கிமீ வேகத்தில் துவங்கி படிப்படியாக 110- 120கிமீ வேகம் வரை வீசும் என்றும் இதனால் வடதமிழ் நாடு கடலோரப்பகுதிகளிலும், தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்