சிதமபரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு

Ilavarasan

வெள்ளி, 16 மே 2014 (10:28 IST)
சிதமபரம் தனி தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 
சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய இந்த பாராளுமன்ற தொகுதியின் ஓட்டு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. பதிவான வாக்குகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டது.
 
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். முதல் சுற்று முடிவில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசியை விட 3256 ஓட்டுகள் பின் தங்கி இருந்தார்.
 
முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:–
 
சந்திரகாசி (அ.தி.மு.க.) – 21,715
 
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) – 18,459
 
சுதா மணிரத்தினம் (பா.ம.க.) – 13,407
 
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm
 
LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm

வெப்துனியாவைப் படிக்கவும்