ஹெல்மெட் சட்டம் என்ன ஆச்சு: சட்டசபையில் விவாதம்

புதன், 24 ஜூன் 2009 (17:50 IST)
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் போக்குவரத்து மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. என்றாலும், சில நேரங்களில் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராரம் வசூல் செய்கின்றனர். எனவே ஹெல்மெட் அணிவது தொடர்பான சட்டம் என்ன ஆச்சு என்பது குறித்து விளக்கம் வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, "ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை நீதிமன்றம் உறுதி செய்தது. எனினும், வாகனம் ஓட்டும்போது பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக, ஹெல்மெட் அணிவது தொடர்பாக, பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்