வேலை பார்த்த நகைக்கடையில் கொள்ளையடித்து நடன அழகிகுளுடன் உல்லாசம்!

செவ்வாய், 30 ஏப்ரல் 2013 (17:45 IST)
30 ஆண்டுகாலமாக கேரளா ஜுவல்லர்ஸில் பணியாற்றி வந்த நம்பிக்கைக்குரிய ஊழியர் ஒருவர் கடையிலிருந்து தங்க வளையல்களை சிறுகச் சிறுக திருடி நடன அழகிகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் உள்ள பிரபல நகைக்கடை கேரள ஜுவெல்லர்ஸ் ஆகும். இதன் உரிமையாளர் தங்கள் கடையில் உள்ள நகைகளின் கையிருப்பை அவ்வப்போது சரிபார்த்து வைத்துக்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் அவ்வாறு சரிபார்த்தபோது 417 நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக தங்க வளையல்கள் மாயமாகியுள்ளமை தெரியவந்தது.

வளையல் பிரிவில் பொறுப்பாளராக பணியாற்றியவர் பாஸ்கர் என்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஆவார். அவர் மீது கடை உரிமையாளருக்கு சந்தேகம் எழவே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து பாஸ்கரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பாஸ்கர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். உடனே கைது செய்யப்பட்டார். இந்த பாஸ்கருக்கு 43 வயது சுமார் 30 ஆண்டுகள் நம்பிக்கைக்குரிய பணியாளராக இங்கு அவர் ஊழியம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகன் பள்ளியிலும் மகள் கல்லூரியிலும் படித்துவருகின்றனர். சென்னையில்தான் இவர்கள் வசித்து வந்தனர். 13,000 சம்பளத்துடன் நன்றாகவே வாழ்ந்துவந்தார். அப்போதுதான் புகுந்தது அவர் வாழ்வில் அழகிகள் மீதான மோகம்!

அவருடைய நண்பர் ஒருவர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அழகிகள் நடனத்திற்கு இவரைக் கூட்டிக் கொண்டு போய் பழக்கியுள்ளார். இதனால் அடிக்கடி அவர் நட்சத்திர விடுதிக்கு போக ஆரம்பித்தார். 13,000 சம்பளம் வாங்கும் ஒருவர் நட்சத்திர விடுதி நடனத்திற்கு அடிக்கடி சென்றால் என்ன நடக்கும்? பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் சிறுகச் சிறுக தான் வேலைபார்த்து வந்த நகைக்கடையின் நகைகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். சிறுகச் சிறுகத் திருடி அதனை அடகுக் கடையில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணத்தை அழகிகள் நடனத்தில் விட்டார் பாஸ்கர்.

இப்படியே போனால் என்னாகும் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டாமா? ஒரு அழகியிடம் சிக்கினார். அந்த அழகிக்கு சொகுசு கார், மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்தார். இதோடு மட்டுமல்லாமல் கடையில் திருடிய தங்க நகைகளையும் அன்பளிப்பாக வழங்கினார். இவ்வாறு கொடுக்கத் தொடங்கியதும் அழகியும் இவரது வலையில் விழுந்தார். பிறகென்ன? உல்லாசம் அனுபவித்தனர்.

இப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நகைகள் ஓரளவுக்கு மீட்கப்பட்டது. சொகுசு கார் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நண்பனால் கெட்ட அந்த எளிய நகைக்கடை ஊழியரின் குடும்பத்தை நினைத்துப்பாருங்கள்! அவமானம்தான் எஞ்சும்!

வெப்துனியாவைப் படிக்கவும்