வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வானவ‌ர்க‌ள் பட்டியல் வெ‌ளி‌யீடு

வெள்ளி, 16 மார்ச் 2012 (16:07 IST)
வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய‌ம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் அடங்கிய வி.ஏ.ஓ. பதவியில் (2009-2010-ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது) ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பினருக்கான 1077 பின்னடைவு பணியிடங்கள் உள்பட 3,484 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு 20.2.2011 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 19.7.2011 அன்றும், 13.9.2011 அன்றும் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 38.2011 முதல் 18.8.2011 வரையிலும், 26.9.2011 முதல் 30.9.2011 வரையிலும் நடந்தது.

தற்போது வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்கள் அளித்த மாவட்ட முன்னுரிமை வரிசை மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட வாரியாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in/recruitnresults.htm) வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்