விவாகரத்து‌க்கு ஒ‌த்து‌ப்போன நடிகை விந்தியா

செவ்வாய், 27 மார்ச் 2012 (11:05 IST)
WD
பிரபல த‌மி‌ழ் நடிகை ‌‌வி‌ந்‌‌தியா ‌விவாகர‌த்து கேட‌்டு சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

'சங்கமம்' என்ற சினிமா படத்தில் அறிமுகமானவர் விந்தியா. பல்வேறு சினிமா படங்களில் நடித்து புகழ் பெற்ற ‌வி‌ந்‌தியா, சில ஆண்டுகளுக்கு முன்பு கோபி என்கிற கோபால கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ‌வி‌ந்‌தியாவு‌க்கு‌ம், கோ‌பி‌க்கு‌ம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடு‌த்து இருவரு‌ம் சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சா‌ற்‌றி மனுதாக்கல் செய்தனர்.

பல மாதங்கள் நிலுவையில் இருந்து வரு‌ம் இ‌ந்த மனு ‌விசாரணை த‌ற்போது முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளது. பரஸ்பரம் 2 பேரும் பிரிந்து செல்ல முடிவு செய்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஒருவரை ஒருவர் சுமுகமாக பிரிந்து செல்ல இருப்பதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் புதிய மனு தாக்கல் செய்தனர்.

நீ‌திம‌ன்ற அலுவலக அதிகாரியிடம் இர‌ண்டு பேரு‌ம் இணைந்து தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்