விஜயின் மாமா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

புதன், 21 ஆகஸ்ட் 2013 (14:21 IST)
FILE
நடிகர் விஜயின் தாய் மாமாவிற்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நடிகர் விஜயின் தாய் மாமாவினுடைய நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் பின்புறம் உள்ள அவரது நிறுவனத்திலும், இந்த ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

விஜய் இயக்கி நடித்த தலைவா படம் பல்வேறு காரணங்களுக்காக கால தாமதமாக வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயின் தாய் மாமா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்க்கொண்டுள்ளது விஜய் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்