வாழை ரூ.6.5 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

வியாழன், 22 ஆகஸ்ட் 2013 (18:42 IST)
சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 6.5 லட்சம் மதிப்புள்ள வாழைக்கள் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தங்கள் வயலில் வாழை பயிரிட்டுள்ளனர். இந்த வாழை தற்போது அறுவடையாகி வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வாழைகள் சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் முறையில் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
FILE


சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், திருப்பூர், அன்னூர், கோயமுத்தூர், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாழை தார் கொள்முதல் செய்ய வந்திருந்தனர். சங்கத்தில் நடந்த ஏல விற்பனையில் கதளி ஒரு கிலோ ரூ. 48.10, நேந்திரம் கிலோ ஒன்று ரூ. 49 க்கும் விற்பனையானது.

செவ்வாழை ஒரு தார் ரூ. 760 க்கும், தேன் வாழை ஒரு தார் ரூ. 810 க்கும், பூவன் வாழை தார் ஒன்று ரூ. 560 க்கும், மொந்தன் தார் ஒன்று ரூ. 540 க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் சற்று விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.