வளிமண்டலத்தின் மேலடுக்கில் காற்று சுழற்சி: தமிழகத்தில் மழை நீடிக்கும்

திங்கள், 22 செப்டம்பர் 2014 (15:22 IST)
லட்சத்தீவு அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக  தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாகவே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல மாவட்டங்களில் மிதமாக மழை பெய்தது.
 
சென்னையை பொருத்தவரை அடையார், மயிலாப்பூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
 
அதிகாலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 31.4 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 13.3 மி.மீட்டர் மழையும் பதிவாகிவுள்ளது. இந்நிலையில் லட்சத்தீவு அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்