தமிழகத்தில் டிரஸ், டிவி, ப்ரிட்ஜ், வாகனங்கள் வாங்கினால் தள்ளுபடி என ஆடி மாதத்தையே அமர்க்களம் செய்துவிடுவார்கள். இந்நிலையில் முன்னணி "வங்கியில் ஆடி அதிரடி தள்ளுபடி" என்ற சுவரொட்டி விளம்பரம் வைரலாகி வருகிறது.
இந்த சுவரொட்டி விளம்பரத்தில் "அதிசயம் ஆனால் உண்மை... ஆடி அதிரடி தள்ளுபடி. எங்களது வங்கி கிளையில் கடன் பெற்று அதனை உரிய காலத்திற்குள் செலுத்த தவறிய வாடிக்கையாளர்களுக்கு "வங்கியில் ஆடி தள்ளுபடி" பெற்று ஒரே தவணையில் கடனை முடித்துக் கொள்ள ஒர் அறிய வாய்ப்பு, உரிய முறையில் கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு மீண்டும் வங்கியில் கடன் வழங்கப்படும்" என்ற ஒரு அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.