வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை! மழை பெய்ய வாய்ப்பு

திங்கள், 18 ஜூன் 2012 (15:19 IST)
வங்க கடலில் ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஆந்திராவிலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியை ஒட்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யும் அறிகுறியுடன் காணப்பட்டது.

பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருப்பதால் தமிழ்நாட்டில் கடந்த 2 மாதமாக நீடித்து வந்த வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று வெயில் அளவு 100 டிகிரியாக குறைந்தது. இதற்கிடையே தமிழ்நாட் டின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்